Thursday, November 26, 2009

சின்ன சூரனின் 500cc

MM's வரலாற்றில் 500cc வைத்திருக்கும் ஒரே ஆள் எங்கள் சின்ன சூரன் தான். இவர் அடிக்கடி Bike பற்றிய விவாதம் வரும் போதெல்லாம் "ம்ம்ம்...அண்ணணோட 500cc-ய பார்த்தேல்ல" என்று சொல்லுவார் நாங்கள் பதிலுக்கு "அப்படியா, உங்க அண்ணன் 500cc வாங்கிட்டாரா" என்று கேட்போம். இவ்வாறு பல முறை நடந்திருக்கிறது. அவன் உன்மையில் வைத்திருப்பது 100cc-கும் கம்மியான TVS விக்டர்தான். ஆனால் இது வரை அந்த பெயரை அவன் உபயோகித்ததேயில்லை. அந்த வண்டியில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் முதல் முறையாக Civil மற்றும் Mechanical Engineer சேர்ந்து உருவாக்கிய வண்டி அது ஆம் வண்டியின் பாகங்களை இணைக்க கட்டு கம்பி தான் உபயோகித்து இருப்பார்கள். இவன் பெரும்பாலும் Signal ல நின்றதேயில்லை பலமுறை Fine கட்டியிருக்கான். அதற்கான காரனத்தை விசாரித்ததில் தான் தெரிய வந்தது வண்டியில் Signal -இல் பிரேக் அடித்தால் அது அடுத்த Signal -இல் தான் நிற்க்கும் என்று. அந்த அளவிற்கு பிரேக் ரொம்ப Sharp ... :) . அப்புறம் எதாவது Accident ஆனா கூட யாரும் ஏண்டா Break போடலேன்னு கேட்கமுடியாது,ஏன்னா Break மேல கால் வச்ச உடனே அது கத்த ஆரம்பிச்சுடும் அந்த அளவுக்கு latest Technology உடன் இருக்கும் Bike வைத்திருக்கும் ஒரே ஆள் எங்க சின்ன சூரன்... :)

4 comments:

  1. என்ன நாகா இவ்வளவு நாள் பழகியிருக்கோம் ஆனால் தென்றல் பேரு சின்ன சூரன் என்று சொல்லவேஇல்லையே....

    ReplyDelete
  2. தலைவா!!!

    பிரேக் மட்டுமில்லை... ஹெட்லைட்டும் கிடையாது.

    சும்மா அண்ணாமலை சைக்கிள் மாதிரி அண்ணன் பைக். யானைவரும் பின்னே ஓசைவரும் முன்னே மாதிரி சவுண்டுமட்டும் காத பட்டைய கிளப்பும். ஒருதடவை பிரேக் அடிச்சபோ ரோட்டுல ஒருத்தர் பயந்து கீழவிழுந்துடாரமில்ல? உண்மையா?

    ReplyDelete
  3. Srini eppadi ungalukku mattul ella newsum correcta vandhiduthu ? :) :)

    ReplyDelete
  4. ஒருநாள் வண்டியிலிருந்து பேட்டரி(மின்கலம்) வழியில் விழுந்தது கூடத்தெரியாமல் ரூமிலிருந்து ஆபிஸ் வந்ததாகவும் சற்றுமுன் அறிந்தேன்.

    ReplyDelete