Friday, November 6, 2009

வடை மாமாவும் வைரமுத்துவும்

எங்கள் MM’s குழுவை சார்ந்த சிலர் ஆயுத எழுத்து படத்தை பார்க்க திரை அரங்கிற்கு போயிருந்தனர். வழக்கம் போல் 20 நிமிடம் தாமதமாக போயிருந்தனர். அது மக்களின் எதிர் பார்ப்பு அதிகம் இருந்த படம் என்பதால் சென்றவர்களுக்கு ஒரே வரிசையில் இருக்கை கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த இடத்தில் உட்கார்ந்து படத்தை பார்க்க தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் காட்சி அமைப்பு மெய்சிலிற்க வைக்க.
சரசு: chaa செம sceen இல்ல...
Boat: ஆமா...
முன் வரிசையுல் இருந்து ஒரு குரல்: வைரமுத்துவோட இயக்கமுன்னா சும்மாவா...
சரசு: ஹ்ம்ம் எவனோ ஒருத்தன் மணிரத்தினம் இயக்கத்தை வைரமுத்துவோட இயக்கமுன்னு சொல்லுறான் பாரு...
Boat: சரியான லூசு போல...
இடைவேளையின் போது light இல் பார்த்தால் அப்புடியே shock ஆய்ட்டாங்க, ஏன்னா முன் வரிசையுல் வாய்சு வந்த இடத்தில் நம்ம வடை மாமா...!!!இருவரும் கெக்கபெக்க கெக்கபெக்கவென்றூ சிரித்துவிட்டனர்...

1 comment: