Thursday, September 2, 2010

தீபாவளி சோளிங்கர் பயணம்...பாகம்- 2

ஒரு ஆர்வகோலாரில் ஆரம்பித்த வலைபதிப்பு இடையில் ஏற்பட்ட சூழல் மாற்றத்தினால் நன்பன் நரி சொன்னமாதிரி மங்கிவிடுமோ என்று பயந்த எனக்கு கிடைத்தது இந்த வாய்ப்பு.

இரு சக்கர வாகனத்தில் போக முடிவு எடுத்ததும், பொழுது சாய்வதற்குள் கிளம்பிவிடலாம் என்று எண்ணினோம் ஆனால் நாங்கள் அனைவரும் அலுவலகப் பணியை முடித்து வீட்டுக்கு வருவதற்கே மணி 9 ஆகிவிட்டது. சரி புறப்படலாம் என்ற போது தான் ஓவி இன்னும் வீடு வந்து சேராதது தெரிய வந்தது. ஓவி கைபேசியில் அழைத்து விசாரித்தால் அவன் யானை வாங்கியவருக்கு அங்குசம் கொடுக்க போனதாக புலுகினான். சரி இது வாலிப வயசு என்று எண்ணி மன்னித்து விட்டோம். இந்த Gap இல் நம்ப பசங்க புகை படம் எடுக்க தொடங்கிவிட்டனர்.
ஒரு வழியாக ஓவி வந்து சேர எல்லோரும் மூட்டை முடிச்சி எடுத்துக்கொண்டு வண்டியை கிளப்பினோம். சின்ன சூரன் ஒரு சின்ன குழந்தை மாதிரி எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பான். இப்போது அவர் அடம் பிடித்தது 200 சிசி Pulsar ஓட்ட வேண்டும் என்று. சரி நாங்கள் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்க. அனைவரும் வண்டி யில் அமர்ந்து புறப்படுவதற்க்கு முன் கடைசியாக ஒரு புகைப் படம் எடுக்க, பின் புழுதியை கிளப்பிக்கொண்டு புறப்பட்டோம். அடுத்து எங்கள் நிருத்தம்  ஓசூர் பட்டாசு கடை.
 ஒரு குறிப்பிட்ட கடை க்கு போக வேண்டாம் என்று எங்களுக்கு தகவல் வர நாங்கள் உஷார் ஆனோம்  ஒரு நல்ல (standerd) கடைக்குள் சென்றோம்.பட்டாசு வாங்க ஒருவனிடமும் பைசா இல்லை என்றாலும், பட்டாசு எப்படி வாங்குவது என்று இவர்களிடம் தான் கற்று கொள்ள வேண்டும். ஒவ்வொன்றும் எப்படி வெடிக்கும், என்ன விலை என்று பார்க்காமல் அதில் எந்த நடிகையின் புகைபடம் ஒட்டப்பற்றிருக்கின்றது என்று பார்த்துதான் வாங்கினார்கள். இந்த விஷயத்தில் ஓவியும், சின்ன சூரனும் கூட்டு களவானிகள்.
அவரவருக்கு தகுந்தார் போல் பட்டாசுகளை எடுத்து வைக்க. சின்ன சூரன் 1000,2000,5000சரம் என்ன விலை என்று விசாரித்து கடைசியில் 200சரம் மட்டுமே வாங்கினான். ஒரு வழியாக பட்டாசுக்களை மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பும் வேலையில் தான் நம்ம பசங்களுக்கு அவசரமாக விசில் அடிக்க தோன்றியது,  சரி ஆத்திரத்தை அடக்கலாம் அதை முடியாதே என்று இடைவேளை விட்டால் உடனே சின்ன சூரன் தேநீர் வாங்கி கொடுங்கள் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.
நேரம் இல்லாத காரணத்தினால் நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பாவம் சுருங்கிய முகத்துடன்  சீறி சென்றான் சின்ன சூரன்.சென்றவன் எங்களுக்கு முன்னால் போகாமல் கிருஷ்ண்கிரி மலை அடீவாரத்தில் நின்று கொண்டு டீ வங்கி தருமாரு அடம்பிடித்தான் பின்பு பொறைகான் சூடாகி சுட்டெடுத்ததும் முனகிக்கோண்டே பின்தொடர்ந்தான்...

Thursday, July 29, 2010

நான் ஒரு Entrepreneur

'என்ட்ரெப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?
முதலாளி என்பவர் முதல் அளிப்பவர். தொழிலாளி என்பவர் தொழில் செய்பவர். 'என்ட்ரெப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?


'என்ட்ரெப்ரெனர்' என்பவர் தன்னையும், தன் நேரத்தையும், யோசனைகளையும், உழைப்பையும் தன் வசம் வைத்திருப்பவர். சமூகத்திற்குப் பயனுள்ள வேலைகள் செய்து பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவர். புதிய பாதைகளைக் கண்டுபிடிப்பவர். தொழிலுக்குச் சம்பளம் என்று யோசிக்காதவர். லாபத்தைப் பெருக்கி அதைப் புதிய வழிகளில் எப்படிச் செலவு செய்யலாம் என்று யோசிப்பவர்.

வாழ்க்கையின் தேவைகளால் தளர்ந்து போகாதவரும், வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் வேகம் உள்ளவரும் 'என்ட்ரெப்ரெனர்' ஆகும் வாய்ப்புகள் அதிகம். 1980 களிலும் 90 களிலும் பிறந்தவர்கள் இப்படிப் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறார்கள்.

இந்த ஆங்கில வார்த்தைக்குத் தமிழ்ப் பதம் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் இதைப் பற்றித் தமிழர்கள் பழங்காலத்தில் யோசிக்கவே இல்லையா?

சாம்பார்- படித்ததில் பிடித்தது

எங்கள் வீட்டில் ஒரு குண்டான் சாம்பார் வைத்தாலும் நானும் என் அண்ணனும் ஒரெய் சிட்டிங்கில் காலி பண்ணிடுவோம் அதே போல்  

சாம்பாரில் 
வெடி சாம்பார்,
திடீர் சாம்பார்,
மிளகு சாம்பார் - என பலவகை உண்டு.

பால்ய வயதில்
சாம்பார் என்றால் அவ்வளவு இஷ்டம்
கூடுதலாய் நாலுவாய் சோறு
உள்ளே இறங்கும் - அதனாலேயே
வாரத்திற்கு இரண்டு முறை சாம்பார்.

அக்கா, அத்தை, அம்மா
சமைக்கிற சாம்பார்களில்
அம்மா வைக்கும் 'சாம்பார்'
அலாதியானது.
கொஞ்சூண்டு காய்கறி போட்டாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில்
மணக்க மணக்க சாம்பார் தயார்.

மூன்று ஷிப்டுகளிலும்
மாறி, மாறி
கேண்டினில் சாம்பார்.
அப்பாவுக்கு அதனாலேயே
'சாம்பார்' என்றாலே அலார்ஜி.

ஜெமினிகணேசனை
'சாம்பார்' என்பார்களே!
பிடித்ததினாலா!
பிடிக்காமல் போனதினாலா!

எத்தனை முறை நான்
சாம்பார் வைத்தாலும் - ஒவ்வொரு முறை
ஒவ்வொரு சுவை வருகிறது.

'சாம்பாரில் நீ எக்ஸ்பர்ட் ஆயிட்டடா?'
புகழ்கிறார்கள் நண்பர்கள்.

இப்பொழுதெல்லாம்
எங்கள் ஏரியாவில் கையேந்திபவன்களில்
'சாம்பார்' என்ற பெயரில்
ரசம் போல தரும் சாம்பார் கூட
தருவதில்லை.
இரண்டு வகை சட்னி மட்டும்தான்!
அல்லது சேர்வை மட்டும் தான்!
'சாம்பார்' பணக்காரர்களின்
உண்வாகிவிட்டது.

'பாழாய் போன
கருணாநிதியால் தான் இப்படி?
எம்ஜிஆர் இருந்தால்
இப்படி நடக்க விட்டிருப்பாரா?'
புலம்புகிறார் பக்கத்துவீட்டு
வயதான தாய்க்குலம்.

சாம்பாருக்காவது
விலைவாசியை எதிர்த்து...
தெருவில் இறங்கி போராடலாம்
என தயாராய் இருக்கிறேன்.

உங்களுக்கும் சாம்பார்
பிடிக்கும் தானே!

Monday, December 7, 2009

கஜினி:


தன்னம்பிக்கை-கும் தலைகனதுக்கும் ஒரு நூல் அளவு தான் வித்தியாசம்... என்னால Full அடிச்சிட்டு Steady- நிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை - என்நால மட்டும் தான் Full அடிச்சிட்டு Steady- நிக்க முடியும்னு சொல்றது தலைகனம்

Thursday, November 26, 2009

சின்ன சூரனின் 500cc

MM's வரலாற்றில் 500cc வைத்திருக்கும் ஒரே ஆள் எங்கள் சின்ன சூரன் தான். இவர் அடிக்கடி Bike பற்றிய விவாதம் வரும் போதெல்லாம் "ம்ம்ம்...அண்ணணோட 500cc-ய பார்த்தேல்ல" என்று சொல்லுவார் நாங்கள் பதிலுக்கு "அப்படியா, உங்க அண்ணன் 500cc வாங்கிட்டாரா" என்று கேட்போம். இவ்வாறு பல முறை நடந்திருக்கிறது. அவன் உன்மையில் வைத்திருப்பது 100cc-கும் கம்மியான TVS விக்டர்தான். ஆனால் இது வரை அந்த பெயரை அவன் உபயோகித்ததேயில்லை. அந்த வண்டியில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் முதல் முறையாக Civil மற்றும் Mechanical Engineer சேர்ந்து உருவாக்கிய வண்டி அது ஆம் வண்டியின் பாகங்களை இணைக்க கட்டு கம்பி தான் உபயோகித்து இருப்பார்கள். இவன் பெரும்பாலும் Signal ல நின்றதேயில்லை பலமுறை Fine கட்டியிருக்கான். அதற்கான காரனத்தை விசாரித்ததில் தான் தெரிய வந்தது வண்டியில் Signal -இல் பிரேக் அடித்தால் அது அடுத்த Signal -இல் தான் நிற்க்கும் என்று. அந்த அளவிற்கு பிரேக் ரொம்ப Sharp ... :) . அப்புறம் எதாவது Accident ஆனா கூட யாரும் ஏண்டா Break போடலேன்னு கேட்கமுடியாது,ஏன்னா Break மேல கால் வச்ச உடனே அது கத்த ஆரம்பிச்சுடும் அந்த அளவுக்கு latest Technology உடன் இருக்கும் Bike வைத்திருக்கும் ஒரே ஆள் எங்க சின்ன சூரன்... :)

Wednesday, November 11, 2009

தத்துவம்:

என்ன தான் ஒருத்தன் (Hulk) குண்டா இருந்தாலும் , அவன துப்பாக்கி (Gun) உள்ள போட முடியாது...
-குண்டா இருந்தாலும் Clever யோசிப்போர் சங்கம்.