Thursday, November 26, 2009

சின்ன சூரனின் 500cc

MM's வரலாற்றில் 500cc வைத்திருக்கும் ஒரே ஆள் எங்கள் சின்ன சூரன் தான். இவர் அடிக்கடி Bike பற்றிய விவாதம் வரும் போதெல்லாம் "ம்ம்ம்...அண்ணணோட 500cc-ய பார்த்தேல்ல" என்று சொல்லுவார் நாங்கள் பதிலுக்கு "அப்படியா, உங்க அண்ணன் 500cc வாங்கிட்டாரா" என்று கேட்போம். இவ்வாறு பல முறை நடந்திருக்கிறது. அவன் உன்மையில் வைத்திருப்பது 100cc-கும் கம்மியான TVS விக்டர்தான். ஆனால் இது வரை அந்த பெயரை அவன் உபயோகித்ததேயில்லை. அந்த வண்டியில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் முதல் முறையாக Civil மற்றும் Mechanical Engineer சேர்ந்து உருவாக்கிய வண்டி அது ஆம் வண்டியின் பாகங்களை இணைக்க கட்டு கம்பி தான் உபயோகித்து இருப்பார்கள். இவன் பெரும்பாலும் Signal ல நின்றதேயில்லை பலமுறை Fine கட்டியிருக்கான். அதற்கான காரனத்தை விசாரித்ததில் தான் தெரிய வந்தது வண்டியில் Signal -இல் பிரேக் அடித்தால் அது அடுத்த Signal -இல் தான் நிற்க்கும் என்று. அந்த அளவிற்கு பிரேக் ரொம்ப Sharp ... :) . அப்புறம் எதாவது Accident ஆனா கூட யாரும் ஏண்டா Break போடலேன்னு கேட்கமுடியாது,ஏன்னா Break மேல கால் வச்ச உடனே அது கத்த ஆரம்பிச்சுடும் அந்த அளவுக்கு latest Technology உடன் இருக்கும் Bike வைத்திருக்கும் ஒரே ஆள் எங்க சின்ன சூரன்... :)

Wednesday, November 11, 2009

தத்துவம்:

என்ன தான் ஒருத்தன் (Hulk) குண்டா இருந்தாலும் , அவன துப்பாக்கி (Gun) உள்ள போட முடியாது...
-குண்டா இருந்தாலும் Clever யோசிப்போர் சங்கம்.

Tuesday, November 10, 2009

ஓவியின் கைபேசி

எங்கள் Roomஇல் கைபேசிக்கு (cellphone) பெயர் போனவர் திரு. O for ஓவி. இவருக்கு கைபேசி 4 mm கணத்திர்க்கு மேல் இருந்தாலோ, அல்லது அதன் விலை ரூ.5000/- க்கு மேல் இருந்தாலோ பிடிக்காது. ஒரு கைபேசிக்கு இவ்வளவு யோசிக்கும் இவர் எனக்கு தெரிந்து அழைப்பை எடுத்தது இல்லை. முக்கியமான ஒன்று அவர் கைபேசிக்கு வரும் 90% அழைப்பு அவரே மற்றவருடைய கைபேசியில் இருந்து அழைத்ததாகத்தான் இருக்கும் (எங்கயாவது வைத்துவிட்டு தேடுவதற்காக!!! :) :) ) அந்த அளவிற்க்கு இருப்பது தெரியாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

பாவம் ஒருநாள் இவருக்கு நிர்ந்தரமாக தெரியாமலே போய்விட்டது Busஇல் எவனோ ஆட்டய போட்டுடான்...!!! :) :)

Saturday, November 7, 2009

தத்துவம்:

கடந்து வந்த பதையைத் திரும்பிப் பார்க்கிறது தப்பில்லை;
அதுக்காக வண்டி ஓட்டும்பொது திரும்பிப்பார்க்கக் கூடாது.
- வாழ்க்கையைப் பின்புறமாக அணுகுவோர் சங்கம்
நன்றி குங்குமம்

தமாசு: அம்மாவுக்காக...!!!

அம்மா: “ஏன்டா, காலேஜ்ல இருந்து இவ்வளவு லேட்டா வர்றே?”
பையன்: “என்னை என்னம்மா பண்ணச் சொல்ற...
ஒவ்வோரு Bus stopஆ அலைஞ்சு திரிஞ்சு, உனக்கு ஒரு நல்ல மருமகளைத் தேடுறதே என் வேலையாப் போச்சு...!!!”

Friday, November 6, 2009

வடை மாமாவும் வைரமுத்துவும்

எங்கள் MM’s குழுவை சார்ந்த சிலர் ஆயுத எழுத்து படத்தை பார்க்க திரை அரங்கிற்கு போயிருந்தனர். வழக்கம் போல் 20 நிமிடம் தாமதமாக போயிருந்தனர். அது மக்களின் எதிர் பார்ப்பு அதிகம் இருந்த படம் என்பதால் சென்றவர்களுக்கு ஒரே வரிசையில் இருக்கை கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த இடத்தில் உட்கார்ந்து படத்தை பார்க்க தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் காட்சி அமைப்பு மெய்சிலிற்க வைக்க.
சரசு: chaa செம sceen இல்ல...
Boat: ஆமா...
முன் வரிசையுல் இருந்து ஒரு குரல்: வைரமுத்துவோட இயக்கமுன்னா சும்மாவா...
சரசு: ஹ்ம்ம் எவனோ ஒருத்தன் மணிரத்தினம் இயக்கத்தை வைரமுத்துவோட இயக்கமுன்னு சொல்லுறான் பாரு...
Boat: சரியான லூசு போல...
இடைவேளையின் போது light இல் பார்த்தால் அப்புடியே shock ஆய்ட்டாங்க, ஏன்னா முன் வரிசையுல் வாய்சு வந்த இடத்தில் நம்ம வடை மாமா...!!!இருவரும் கெக்கபெக்க கெக்கபெக்கவென்றூ சிரித்துவிட்டனர்...

வெங்காய வடை

என்ன டா இது வெங்காய பஜ்ஜி தான் கேள்வி பட்டிருகோம் இது இன்னாது வெங்காய வடையா அப்படினு நீங்க வாய தொறந்து கொஞ்சநேரம் இருந்தா கூட அதுல அரை லிட்டர் எண்னை ஊத்தி வடை சுட்டுவிடுவான் எங்க Five. அவனை பற்றிய கதைகளை வடை மாமா என்ற தலைப்பில் எழுத எனக்கு நினைவுட்டிய என் நண்பன் சரசுவுக்கு நன்றி.

தீபாவளி சோளிங்கர் பயணம்...பாகம்- 1


பண்டிகை நாட்களில் பேருந்து மற்றும் இரயிலில் முன் பதிவு செய்யாமல் செல்வது கடினமான ஒன்று. ஆகையால் நாங்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல முடிவெடுத்தோம் ( இது நாங்கள் அவரவர் வீட்டில் சொன்ன சாக்கு ) எங்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல பல முறை சென்றிருக்கிறோம். ஆனால் இந்த பயணம் சிறப்பு வாய்ந்தது 3 வாகனம் சேர்ந்து செல்வது இதுவே முதன் முறை. பெயர்கள் பொறை, ஓவி, ஓம்லெட், சூரன், சின்ன சூரன். கொசு வண்டி. வாகனம் இந்தியாவில் இந்தியனால் உருவாக்கப்பட்ட பஜாஜ் பல்சர் 150, 180, 200. ( கடல் தாண்டி போய் அங்கேயும் பஜாஜ் பல்சர் தான் வங்கினான் எங்க நரி ).
புறபடுவதர்க்கு முன்னால் பேசியது இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.
ஒம்லைட்: அண்ணா.. மணிக்கு 60 கீமி மேல் போகக்கூடாது.
ஓவி: இல்ல..இல்ல மணிக்கு 70 கீமி மேல் போகக்கூடாது.
சூரன்: டேய் குறைந்தது மணிக்கு 80 கீமி  வேகத்தில் போனால் தான் வீடு போய் சேரமுடியும்.
ஆனால் உண்மையில் ஒருத்தன் கூட மணிக்கு 100 கீமி கீழ் போகவில்லை என்பது தான் அந்த நகைச்சுவை :)
சரி கொசு வண்டி Driverயை பத்தின நகைச்சுவை அடுத்து...
To be Continued…





Thursday, November 5, 2009

வெட்டி பந்தா

கட்டுமான பணியில்... அப்படின்னு போட்டதும் நான் ஏதோ கொத்தனாரை வச்சு வேலை செய்யுறதா நெனைக்காதீங்க... நம்ப சூரியன் ஏதோ புதிதா ப்லோக் உருவாக்கினதால் நானும் ஒன்னு creat செய்து வச்சுட்டேன்...இதில் என்ன விஷயத்த நீங்க எதிர் பகுரீங்கன்றத உங்களோட commentஇல் சொல்லவும்...


இவன்,
சூரன்.