ஒரு ஆர்வகோலாரில் ஆரம்பித்த வலைபதிப்பு இடையில் ஏற்பட்ட சூழல் மாற்றத்தினால் நன்பன் நரி சொன்னமாதிரி மங்கிவிடுமோ என்று பயந்த எனக்கு கிடைத்தது இந்த வாய்ப்பு.
இரு சக்கர வாகனத்தில் போக முடிவு எடுத்ததும், பொழுது சாய்வதற்குள் கிளம்பிவிடலாம் என்று எண்ணினோம் ஆனால் நாங்கள் அனைவரும் அலுவலகப் பணியை முடித்து வீட்டுக்கு வருவதற்கே மணி 9 ஆகிவிட்டது. சரி புறப்படலாம் என்ற போது தான் ஓவி இன்னும் வீடு வந்து சேராதது தெரிய வந்தது. ஓவி கைபேசியில் அழைத்து விசாரித்தால் அவன் யானை வாங்கியவருக்கு அங்குசம் கொடுக்க போனதாக புலுகினான். சரி இது வாலிப வயசு என்று எண்ணி மன்னித்து விட்டோம். இந்த Gap இல் நம்ப பசங்க புகை படம் எடுக்க தொடங்கிவிட்டனர்.
ஒரு வழியாக ஓவி வந்து சேர எல்லோரும் மூட்டை முடிச்சி எடுத்துக்கொண்டு வண்டியை கிளப்பினோம். சின்ன சூரன் ஒரு சின்ன குழந்தை மாதிரி எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பான். இப்போது அவர் அடம் பிடித்தது 200 சிசி Pulsar ஓட்ட வேண்டும் என்று. சரி நாங்கள் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்க. அனைவரும் வண்டி யில் அமர்ந்து புறப்படுவதற்க்கு முன் கடைசியாக ஒரு புகைப் படம் எடுக்க, பின் புழுதியை கிளப்பிக்கொண்டு புறப்பட்டோம். அடுத்து எங்கள் நிருத்தம் ஓசூர் பட்டாசு கடை.
ஒரு குறிப்பிட்ட கடை க்கு போக வேண்டாம் என்று எங்களுக்கு தகவல் வர நாங்கள் உஷார் ஆனோம் ஒரு நல்ல (standerd) கடைக்குள் சென்றோம்.பட்டாசு வாங்க ஒருவனிடமும் பைசா இல்லை என்றாலும், பட்டாசு எப்படி வாங்குவது என்று இவர்களிடம் தான் கற்று கொள்ள வேண்டும். ஒவ்வொன்றும் எப்படி வெடிக்கும், என்ன விலை என்று பார்க்காமல் அதில் எந்த நடிகையின் புகைபடம் ஒட்டப்பற்றிருக்கின்றது என்று பார்த்துதான் வாங்கினார்கள். இந்த விஷயத்தில் ஓவியும், சின்ன சூரனும் கூட்டு களவானிகள்.
அவரவருக்கு தகுந்தார் போல் பட்டாசுகளை எடுத்து வைக்க. சின்ன சூரன் 1000,2000,5000சரம் என்ன விலை என்று விசாரித்து கடைசியில் 200சரம் மட்டுமே வாங்கினான். ஒரு வழியாக பட்டாசுக்களை மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பும் வேலையில் தான் நம்ம பசங்களுக்கு அவசரமாக விசில் அடிக்க தோன்றியது, சரி ஆத்திரத்தை அடக்கலாம் அதை முடியாதே என்று இடைவேளை விட்டால் உடனே சின்ன சூரன் தேநீர் வாங்கி கொடுங்கள் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.
நேரம் இல்லாத காரணத்தினால் நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பாவம் சுருங்கிய முகத்துடன் சீறி சென்றான் சின்ன சூரன்.சென்றவன் எங்களுக்கு முன்னால் போகாமல் கிருஷ்ண்கிரி மலை அடீவாரத்தில் நின்று கொண்டு டீ வங்கி தருமாரு அடம்பிடித்தான் பின்பு பொறைகான் சூடாகி சுட்டெடுத்ததும் முனகிக்கோண்டே பின்தொடர்ந்தான்...
Thursday, September 2, 2010
Subscribe to:
Posts (Atom)